தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்கிறார் பிரதமர்: நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார!

Wednesday, September 18th, 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான இறுதி துருப்புச் சீட்டை வீச தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்யும் அமைச்சரவை பத்திரம் ஒன்றை பிரதமர், இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை சட்ட சிக்கலாக மாற்றி, ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் விடுவது அல்லது ஒத்திவைப்பது பிரதமரின் நோக்கமாக இருப்பதாகவும் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் பிரச்சினை பிரதமர் முன்னிலையில் இருக்கும் நிலையில், அவருக்கு அதனை விட அரசியல் காரியம் பிரதானமாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு முன்னால், எதனையும் செய்ய முடியாத காரணத்தினால், இறுதி துரும்புச் சீட்டாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் அரசியலை ரணில் கையில் எடுத்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிப்பு – பல பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சுற்றறிக்கைக்கு ...
அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன - பஃவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு...
இந்திய முட்டைக்கு எதிராக உள்ளூர் உற்பத்தியாளர்கள் சதி - அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்...