தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Thursday, August 29th, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களை சென்று கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் சுமார் 14 000 வாக்கெடுப்பு நிலையங்கள் உள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலின்போது குறித்த அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களையும் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிற்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
PCR பரிசோதனை குறித்து வெளியாகியுள்ள அதி முக்கிய செய்தி!
யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருகோடி மக்கள் பாதிப்பு :15 இலட்சம் பேர் வெளியேற்றம்!
நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமைய...
|
|
|


