தேசிய பாதுகாப்பு குறித்து சபையில் நாளை விவாதம்!
Thursday, June 6th, 2019
நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் தேசிய பாதுகாப்பு
தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி விவகாரம் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொண்டு வரவுள்ளது.
பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 7.30 மணிவரை விவாதம் நடைபெறும் என அறிய முடிகின்றது.
அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது அடுத்த மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி பங்கெடுப்பு!
இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!
இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை - நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


