தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் – தினேஷ் குணவர்தன!

Wednesday, September 18th, 2019

நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வையும் வழங்க முடியாத ஐக்கிய தேசியக் கடசியின் ஆட்சியை அகற்ற மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதே கட்சியின் வேலைத்திட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பெரிய சிக்கலில் உள்ளது. நாட்டு மக்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத கஷ்டத்தில் அரசாங்கம் இருக்கின்றது. இந்த கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை.

நாட்டுக்கு எந்த தீர்வையும் வழங்க முடியாத கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாறியுள்ளது. இதனால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனர். நான்கு ஆண்டுகள் நாட்டுக்கு செய்த அழிவுக்காக அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் காத்திருக்கின்றனர் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிப்பு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரை...
உரத்தடை தொடர்பில் அரசாங்கம் மேலும் கவலையடைந்துள்ளது - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன...
இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன...