தபால்மூல வாக்களிக்கும் திகதிகள் அறிவிப்பு!
Wednesday, September 25th, 2019
ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் நவம்பர் மாதம் முதலாம் திகதி அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் எனவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.
அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிரான்ஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்!
சாவகச்சேரி வைத்தியசாலையில் இரத்ததானம்!
வாகனம் மோதி வட்டுக்கோட்டை இளைஞர் பலி - இணுவிலில் சம்பவம்!
|
|
|


