ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!
Thursday, September 26th, 2019
அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க, ஜனாதிபதி நியமித்த எஸ்.ரனுக்கே தலைமையிலான குழுவினர் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், 2020ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரி தரத்தில் இருக்கும் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 9 ஆயிரத்து 587 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்களின் சம்பளம் 23 ஆயிரத்து 975 ரூபாவினாலும் கீழ் நிலை ஊழியர்களின் சம்பளம் 3 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.
Related posts:
யாழ்.மாநகரில் கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு குறித்து ஆராய்வு!
வடக்கின் ரயில் பயண வேகத்தை குறைக்க முயற்சி!
எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் - தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் - வடக்க...
|
|
|


