வெள்ளவத்தை கட்டட அனர்த்தம் முன்னைய அரசுகளின் அசமந்தமே காரணம் என்கிறார் அமைச்சர் ரணவக்க

Tuesday, May 23rd, 2017

வெள்ளவத்தை துயரை அடுத்து அரசாங்கம் 10,000 கட்டடங்களை இடிக்கத் தீர்மானித்துள்ளதக அறிவிக்கப்பட்டுளது. வெள்ளவத்தை பகுதியில் 1,800 அனுமதியற்ற கட்டடங்கள் நிர்மாணிக்கப் பட்டுள்ள தாகவும் தெஹிவளை, மவுண்ட் லாவினிய மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டடங்களை அடையாளங்காணுவதற்கான ஆய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரச தகவல்கள் தேரிவிகின்றன.

வெள்ளவத்தையில் அண்மையில் ஏற்பட்ட கட்டட விபத்தின் எதிரொலொலியாக,  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால்  ஏற்கனவே அடையாளங்காணப்பட்டுள்ள 10,000 நிர்மாணங்கள் உள்ளிட்ட அனைத்து அனுமதியற்ற கட்டடங்களையும் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளது என திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தேர்வித்தார்.

கட்டட நிர்மாணப் பணிகளையும் ரியல்எஸ்டேட் நிறுவனங்களையும்  கண்காணிப்பதற்கும் அவைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பு வாய்ந்த அரசாங்க நிறுவனங்கள் வினைதிறனற்றவையாக உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்தே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரவித்தார்.

தெஹிவலை, மவுண்ட்லாவேனிய மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளில் உள்ள அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றும் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டுமானங்கள் குறித்தும் அனுமதியளிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களில் போதிய கழிவுநீரகற்றல் முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைசர் தெறிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் பம்பலப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தைவரையில் சுமார் 1800க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்த அமைச்சர்

யுத்தகாலப் பகுதியில் எழுந்த அதிகரித்த கேள்விகளைச் சமாளிப்பதற்காக திட்டமிடாமல் கட்டப்பட்ட தொடர்மாடி வீட்டுத்தொகுதிகள் குறித்தும் அமைச்சர் எச்சரிக்கை மணி அடித்துள்ளார். இருவர் மரணமடைவதற்கும் 27பேர் காயமடைவதற்கும் காரணமான  இடிந்து விழுந்த ஏழுமாடிக் கட்டடத்தொகுதி  முன்னைய அரசுகள் காலத்தில் தேவையான அனுமதிகளைப் பெறாமலும்  முறையான ஒழுங்குகள் எதனையும்  பின்பற்றப்படாமலுமே கட்டப்பட்டதாகவும்  தெரவித்த அமைச்சர்  அந்த கட்டட நிர்மாணிப் பணிகளை  கண்காணிப்பதற்கு எந்த அரசாங்க முகவர்களும் அன்று பொறுப்பாக நியமிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்த மண்டபத்தில் அன்று திருமண நிகழ்வுகள் ஏதேனும் நடந்திருந்தால் இடிபாடுகள் காரணமாக உயிர்ச்சேதம் மேலும் அதிகரித்திருக்கும் என்பதுடன் கட்டடத்திற்குச் சொந்தக்காரர்கள் குற்றவியல் குற்றச்சாட்டிற்கும் முகங்கொடுக்க நேர்ந்திருக்கும் என்றும் ரணவக்க கூறினார்.

இந்தத் திருமண மண்டபம் கொழும்பில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எத்தகைய ஆபத்தானவை என்பதை எடுத்துரைப்பதற்கான சிறந்த உதாரணமாகும்’ என்றும் அமைச்சர் கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

அரச பொறியியல் கூட்டுத் தாபனத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள பூர்வாங்க விசாரணைகளிலிருந்து கட்டுமான அமைப்பில் நிலவிய குறைபாடே கட்டடம் இடிவதற்கான காரணம் என்பது தெரியவந்துள்ளதாகவும்  அமைச்சர் கூறினார்.

Related posts: