பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதில் மேலும் தாமதம் – தபால் மூலம் இலவசக் கல்வியை வழங்க கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Monday, June 1st, 2020

நாட்டில் கொரோனா நெருக்கடி, இன்னும் 100 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தால், பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மேலும் பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு, தபால் மூலம் இலவசக் கல்வியை கற்றுக் கொடுக்குமாறு, கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கத்தினரால், கண்டி, அலவத்துகொடையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதில் உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக, இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிப்பதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது , இருந்த போதிலும், தற்போதைய நிலையில், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநேகமானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையிலேயே உள்ளனர் என்றும் இதன்காரணமாக வைரஸ் தொற்று முற்றாக நீங்கும்வரை, பாடசாலைகளை ஆரம்பிப்பதை பின் போட்டு மாணவர்களுக்கு தபால் மூலம் கல்வியை கற்றுக் கொடுக்குமாறு தாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


இரண்டாம் கட்ட கொரோனா பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் வ...
இந்தியாவில் இருந்து காங்சேன்துறை துறைமுகத்திற்கு அனுப்பப்படும் அத்தியவசிய பொருட்கள் – துரிதகதியில் ந...
இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் - இந்திய...