சார்க் அமைப்பின் அடுத்த பொதுச்செயலாளராக எசல வீரக்கோன் !

சார்க் அமைப்பின் 14 வது பொதுச்செயலாளராக முன்னாள் வெளிவிவகார செயலாளரும், சிரேஷ்ட தொழில்முறை இராஜதந்திரியுமான எசல வீரக்கோனை நியமனம் செய்வதற்கான முன்மொழிவிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்:ள’ளது.
கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) அமைச்சர்கள் குழுவின் முறைசாரா கூட்டத்தின் போது, 2020 மார்ச் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டது. வீரக்கோன், தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக பணியாற்றுகின்றார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வாக 2019 செப்டம்பர் 26 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, அடுத்த சார்க் பொதுச்செயலாளரின் அங்கீகாரத்தை வரவேற்றதோடு முழு மனதளவிலான ஈடுபாட்டுடன் சார்க் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்த சார்க் வெளிவிவகார அமைச்சர்கள், மேம்படுத்தப்பட்ட வர்த்தகம், முதலீடு, இணைப்பு, சுற்றுலா, கலாச்சாரம், பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினர்.
வெளிவிவகார செயலாளர், முறைசாரா கூட்டத்தை கூட்டியமைக்காக தலைவரான நேபாள வெளிவிவகார அமைச்சர் பிரதீப் குமார் க்யாவலியை பாராட்டியதுடன், மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை சங்கத்தின் முன் கோடிட்டுக் காட்டியமைக்காக தற்போதைய செயலாளர் நாயகம் அம்ஜத் ஹூசைன் பி. சியலை பாராட்டினார். செயலாளர் நாயகமாக இருந்த காலத்தில் பிராந்தியத்தின் நலன்களை மேம்படுத்தியமைக்காக சியலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
Related posts:
|
|