சம்பள முரண்பாடு – சிபாரிசுகள் ஜனவரி முதல்!

Thursday, September 26th, 2019


அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஜனாதிபதி விசேட சம்பள ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இதற்காக அரசாங்கம் மேலும் 12 ஆயிரம் கோடி ரூபாவை மேலதிக நிதியாக ஒதுக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கம் நேற்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது. இதற்கமைவாக ஓய்வுபெற்ற, அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் நான்காயிரம் பேர் உட்பட தற்போது சேவையில் உள்ள அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் 8000 பேருக்கு வாழ்நாள் பூராகவும் முழுமையான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள், இராணுவ வீரர்கள், அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சலுகைகளை இவ்வாறு வேறெந்த அரசாங்கமும் வழங்கவில்லை என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

Related posts: