சதொச நிறுவனத்திற்கு பல பில்லியன் நஷ்டம்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகையை அரிசியை சுங்கத் திணைக்களத்தில் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் சேமித்து வைத்ததன் ஊடாக சதொச நிறுவனத்திற்கு பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சதோச நிறுவன அதிகாரிகள் நேற்று கோப் குழு முன்னிலையில் ஆஜராகி இருந்த போது இந்த விடயம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசியை வேண்டுமென சுங்கத் திணைக்களத்தினுள் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கு கோப் குழு முன்னிலையில் ஆஜராகி இருந்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்திருந்தார்.
Related posts:
அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு மேலும் மூன்று மாதகாலம் அவகாசம் - ஜனாதிபதி அறிவிப்பு!
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம...
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...
|
|