ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய தீர்மானம்!

Friday, March 10th, 2017

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் TPG விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்த முயற்சிக்கும் போதும் இந்த அமெரிக்க நிறுவனம் தனக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அப்போதிருந்த அரசாங்கம் இதனை எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு வழங்கியது.

TPG விமான நிறுவனத்துக்கும் பர்பேச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. TPG விமான நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் எனவும் எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டார்.

இந்த நிறுவன விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், TPG நிறுவனத்துக்கு அடுத்த மாதமளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts:


வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு நிகழ்ச்சி!
அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை - ...
ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நியமங்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்...