இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதை இந்திய இடைநிறுத்தியது !

Saturday, June 11th, 2016

எதிர்வரும் 45 நாட்களுக்கு தமிழக மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதை இந்திய அரசாங்கம் இடைநிறுத்தம் செய்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த 45 நாட்கள் தடையை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம், இந்தியஅரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விரைவில் தாம் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இலங்கைக்கு வருடாந்தம் 5400 மில்லியன்ரூபா நட்டமேற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மீனவர்களுக்கு 2 முதல் 4 மில்லியன் ரூபாய்கள் நட்டமேற்படுகின்றன.இந்தநிலையில் தரவுகளின்படி இலங்கையின் கடற்பரப்பில் தென்னிந்திய மீனவர்கள்,வருடாந்தம் 312 ஆயிரத் மெற்றிக்தொன் மீன்களை பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2015- 2016ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 2313 தென்னிந்திய மீனவர்கள்கைதுசெய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: