கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் விஷேட சந்திப்பு!

அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் நாளை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
நாளை (22) காலை 10 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள மூன்றாவது சந்திப்பு இதுவாகும். இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
ஓகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
புலிகள் அமைப்புக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: - இந்திய மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
|
|