ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவின் FBI வெளியிட்ட அறிக்கை!
Thursday, September 5th, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கிய நபர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளின் தகவல்கள் கொண்ட 5 அறிக்கைகளை அமெரிக்காவின் FBI அலுவலகம் வெளியிட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்திடம் இந்த அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு பிரதான நீதிதவான லங்கா ஜயரத்னவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான FBIயினால் அனுப்பப்பட்ட அந்த அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா கோட்டை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
Related posts:
அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் – நெய்வேலியில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்...
பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம் - ஜெனீவாவி...
|
|
|


