பொதுத் தேர்தல் ஒன்றில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெறுவது சிரமம்!

Thursday, May 4th, 2017

தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய தேசிய தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவது குறித்து மைத்திரி – ரணில் அரசாங்கம் எண்ணிப் பார்ப்பதும் கடினமானது என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

காலிமுகத் திடலில் நடந்த கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

காலிமுகத் திடல் கூட்டம் அரசியல் நிலைப்பாடு ஒன்றை தெளிவுப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இருப்புக்கு சிங்கள பௌத்த மக்கள் இடையிலான அரசியலில் ஆதரவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. தேசிய மட்டத்திலான தேர்தல் ஒன்றில் வெற்றி பெறலாம் என்று மைத்திரி – ரணில் அரசாங்கம் நினைக்குமாயின் மேலும் வலுவடைந்து. தமிழ். சிங்கள கட்சிகளின் ஆதரவை முழுமையாக பெற வேண்டியது அவசியம்.

ஆனால் பெரும்பான்மையான வாக்குகளை பெறக் கூடிய வாய்ப்புகள் குறைவு. தேர்தல் வன்முறை. கள்ள வாக்குகள் மூலம் வெற்றி பெற்றாலும் அது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும். இது ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை விட பாரதூரமான நிலைமையாக மாறும்.எவ்வாறாயினும் ராஜபக்சவினருக்கு மாற்றாக ஒரு சக்தியை தென் பகுதியில் உருவாக்குவது தற்போது எந்த வகையிலும் சாத்தியமாகாது எனவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: