எழுவரைகுளத்தை ஆக்கிரமித்த வனஜீவராசிகள் திணைக்களம் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுகிறது – மருதங்கேணி மீனவர் குற்றச்சாட்டு!
Wednesday, July 31st, 2019
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலுள்ள எழுவரைகுளத்தினை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 120 வரையான தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ள குளத்தினை ஆக்கிரமித்தே அவர்கள் பணத்தினை ஈட்டிவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் அப்பகுதி மீனவர்களால் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
எழுவரைகுளத்தினை சூழ உள்ள பகுதிகளில் வாழும் 120 குடும்பங்கள் அக் குளத்தில்; நன்னீர் மீன்பிடியையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக இத் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தடை போட்டுள்ளனர்.
அந்த குளத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு மீன்படிக்க தடை விதித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினல் அக் குளத்தில் தாம் சுதந்திரமாக நன்னீர் மீன்டிபியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அக் குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை வெளி மாவட்டத்திற்கு குளிரூட்டி வாகனங்களில் அனுப்பிவைக்கும் அளவிற்கு பாரிய அளவில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனவும் மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
Related posts:
|
|
|


