ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Friday, November 24th, 2023

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செலவு தலைப்புத் தொடர்பில், நேற்றையதினம் விவாதிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கருத்துரைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாட்டில் போர் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தொடர்ந்தும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது என்றால் அதைப்பற்றியும் சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தற்போது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற சூழலில் 11 சதவீதம் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்பதுடன், கைத்தொழில் துறை குறித்தே அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், தமிழ் பாதுகாப்பு செலவினம் குறித்து வாக்கெடுப்பை நடத்துமாறு கோரியிருந்தார்.

இதனடிப்படையில், நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாதுகாப்புக்கான, செலவினத்திற்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, பாதுகாப்பு தொடர்பான செலவு தலைப்பு திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் உள்நோக்கமும் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: