இது காட்டிக்கொடுப்பு அல்ல: கொரோனா தொடர்பில் தகவல்களைத் வழங்குங்கள் – சமூக ஆர்வர்கள் கோரிக்கை!

Monday, November 30th, 2020

கொழும்பு உட்பட தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிலர் இன்னமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் நோய்க்காவியாக திரிகின்றனர் என சமூக ஆர்வர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறானவர்களது இத்தகைய செயற்பாட்டால் ஒட்டுமொத்த யாழ்.மாவட்டமும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிய நிலை வரலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

எனவே, பிரதேச ரீதியாக உள்ள சமூக செயற்பாட்டாளர்கள், சமூக நலனில் அக்கறை கொண்ட சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறையாக செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினரால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கொழும்பு போன்ற வெளி இடங்களில் இருந்து வருகைதந்திருப்போர் தொடர்பாக உடனடியாக உங்கள் கிராம சேவையாளர் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தகவல் கொடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறானவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உங்கள் கிராம சேவையாளர், பொதுச் சுகாதார பரிசோதகரின் தொலைபேசி இலக்கம் தெரியாவிடின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய செயற்பாட்டை காட்டிக்கொடுப்பதாக கருதவேண்டாம் என்றும் அவரையும் உங்களையும் மற்றவர்களையும் கொடிய உயிர்கொல்லி நோயில் இருந்து பாதுகாப்பதற்காக நீங்கள் செய்யும் சேவை எனவும் சமூக ஆர்வர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: