எத்தகைய தேர்தல்களுக்கும் தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, August 26th, 2019


தேர்தல்கள் ஆணைக்குழு எத்தகைய தேர்தல்களுக்கும் தயாராகியிருப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தால், தேர்தல்கள் ஆணைக்குழு அதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலுக்கு 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மேலதிகமாக 18 வயதைப் பூர்த்தி செய்யும் இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்று பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதிகாரிகள் மட்டத்தில் இதற்குத் தேவையான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும். அமைச்சரவையின் அங்கீகாரம் தற்போது கிடைத்திருப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் சமன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அங்கீகாரம் கிடைத்தால், சுமார் 80 ஆயிரம் பேரை 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்வாங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  வருடாந்தம் 2 இலட்சத்திற்கும் 3 இலட்சத்திற்கும் இடைப்பட்டோர் வாக்காளர் பட்டியலின் மூலம் வாக்குரிமையைப் பெறுகின்றனர்.

இருப்பினும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல்கள் ஆணைக்குழு தயாரிக்கும் முழுமையான பட்டியலுக்கு அமைவாக எதிர்வரும் தேர்தல்களில் புதிதாக வாக்களிப்பதற்கு உரிமை கொள்வோர் 80 ஆயிரமாக அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: