எதிர்வரும் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
Thursday, October 17th, 2019
எதிர்வரும் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாட்டின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மும்முரமாக தேர்தல் பிரசார நடவடிக்கை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் தீர்மானங்கள் எதுவுமின்றி முடிவுக்கு!
உள்நாட்டு வருவாய் திருத்தம் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு!
இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டில் 30 வீத மருந்து உற்பத்தி - சுகாதார அமைச்சு நம்பிக்கை!
|
|
|


