உடன் அமுலுக்கு வரும் 12விடயங்கள் – அதிச்சியில் பலர்!

Monday, January 6th, 2020


அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பிரதானிகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடி கண்காணிப்புகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதில் தகுதியான மூவரின் பெயர் ஜனாதிபதி செயலகத்திற்கு பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்கள், சட்டமன்ற வாரியங்களுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்கள் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் நியமனம் செய்வதற்கான தகுதிகள், தேவைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியால் முடிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அரசாங்க அதிகாரிகள் கடும் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதிலுள்ள அனைத்தும் நாட்டிலுள்ள தப்பு செய்யும் அனைவருக்கும் ஆப்பு வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது என தென்னிலங்கை ஊடகங்களில் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

1.      குடி போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழிய சிறை.

2.      முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வது முற்றாக இன்று முதல் தடை.

3.      பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

4.      பகிடிவதை செய்து சிக்கினால் 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்.

5.      பாராளுமன்ற உறுப்பினர் 80% மேல் அமர்வுகளில் சமூகமளித்திருத்தல் வேண்டும் .     தவறினால் 5 வருடங்களுக்கு எந்த வித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது.

6.      அரச ஊழியர்கள் சேவை துஸ்பிரயோகம் செய்தால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

7.      ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1% வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெருவாரேயானால் 1கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண்டப்பணமாக செழுத்த வேண்டும்.

8.      அரசியல்வாதிகளின் சிபாரிசின் மூலம் வருபவர்களுக்கு வாழ் நாள் முழுதும் அரச சேவையில் இணையத்தடை.

9.      வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்தகங்களில் அனுமதிப்பத்திரம் 48 மணித்தியாலத்திற்குள் ரத்து செய்யப்படும்.

10.     சொத்துக்களை வாங்கி 5 வருடங்களுக்கு முன் விற்பனை செய்யப்பட்டால் விற்கப்படும் தொகையில் 50% வரியாக செழுத்தப்பட வேண்டும்.

11.     மோட்டார் வாகன பொலிசார் இரகசிய பொலிசாரால் கண்காணிக்கப்படுவர்.சிக்கினால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம்.

12.     தனியார் வைத்தியசாலைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிசார் அவதானிப்பர்.

வழமையாக மக்களை ஏமாற்றி மக்களை அடிமையாக நடாத்திய அதிகாரிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts: