இராணுவ புலனாய்வு அதிகாரி கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான சர்ஜன்ட் சம்பிக்க சுமித் குமார, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பிக்க சுமித் குமார, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார்.
சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் சந்தேகநபரை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை விமர்சித்து செய்திகளை வெளியிட்டு வந்த பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதுடன் கொலை செய்யப்பட்டனர்.
கீத் நொயாரும் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானவர். உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர் நாட்டில் இருந்து வெளியேறி தற்போது அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
Related posts:
|
|