அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!
Wednesday, September 25th, 2019
அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு, இன்றுமுதல் (25) தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
சட்டத்துறைக்கு சம்பளத்தை அதிகரித்து அரச சேவையில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர், டொக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது. சம்பளப் பிரச்சினையை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பலத்த மழை காரணமாக அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது என இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


