ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்- தமிழில் தகவல் வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
Friday, August 7th, 2020
நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜக்க்ஷ தனது டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கையை மீண்டும் ஒரு முறை உங்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதியின்றி எவரும் செல்ல முடியாது!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!
இன்றுமுதல் நாடு முழுவதும் வழமைக்க திரும்’பியது பொதுப் போக்குவரத்து –அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்ப...
|
|
|


