ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் வெளியேறலாம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
 Sunday, July 11th, 2021
        
                    Sunday, July 11th, 2021
            
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்கள் அவ்வாறு விலகினால் அரசாஙகத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு எப்போதும் இருக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே எங்களிற்கு அவர்களின் ஆதரவு கிடைத்தது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அவர்கள் ஐக்கியதேசிய கட்சியையே ஆதரித்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவே உண்மை கதை என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த ஆதரவை அங்கீகரித்து மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பொதுஜனபெரமுன சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாகவே அவர்களிற்கு சில ஆசனங்கள் கிடைத்தன என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், இல்லாதுவிட்டால் அவர்களால் இரண்டுமூன்று ஆசனங்களிற்கு மேல் வென்றிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிக்கட்சி என்ற வகையில் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் முடிவெடுக்கலாம், அதேபோன்று அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தும் இருக்கலாம் விரும்பினால் வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ள இராஜனாங்க அமைச்சர் அதற்கு தடையேதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஶ்ரீலங்கா கட்சியை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலானவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளதால் அவர்கள் வெளியேறினாலும் அது அரசாங்கத்தின் கட்டமைப்பை பாதிக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        