ஸ்ரான்லி வீதியில் ரயில் கடவையை மோட்டார்ச் சைக்கிளில் கடந்தவருக்கு பத்தாயிரம் ரூபா அபராதம்!

மூடப்பட்டிருந்த ரயில் கடவையை மோட்டார்ச் சைக்கிளில் கடந்தவருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் ஒரு வருடத்துக்கு நிறுத்தி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நேற்று-08 ஆம் திகதி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். ஸ்ரான்லி வீதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை காலை புகையிரதம் செல்வதற்காக வீதி மூடப்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் புளி மூட்டையுடன் மோட்டார்ச் சைக்கிளில் வந்த வியாபாரியொருவர் கடவை மூடப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் புளி மூடையுடன் புகையிரதப் பாதையைக் கடந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதியில் நின்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கெதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
குறித்த வியாபாரிக்கு எதிரான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|