கடன் மறுசீரமைப்பு ஒப்புதலையடுத்து முதலாவது நிதித்தொகை இலங்கைக்கு கிடைக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022

இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கிறது.

அன்றுமுதல் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டையும் ஒப்புதலையும் இலங்கை, கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற ஆரம்பிக்கும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்குநர்களின் ஒப்புதல் முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.

இது சர்வதேச நாணய நிதியதிடம் இருந்து இலங்கை உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னுரிமையளிக்கப்பட்ட விடயமாக உள்ளது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் - யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அம...
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - அரச மற்றும் தனியார்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்ற...
ஜனவரி முதல் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 கோடி ரூபா அபராதமாக வசூலிப்பு - நுகர்வோர் விவகார அதிக...