நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது தேசிய கொள்கை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் – உபகுழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, May 4th, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை கண்டறிவதற்கான தேசிய பேரவை உபகுழுவில் தேசிய கொள்கை ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான பாதை வரைபடம் கலந்துரையாடப்பட்டது

மேலும், தேசிய கொள்கை ஆணைக்குழு தொடர்பான வரைவு சட்டமூலம், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்று, விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உபகுழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களின் கொள்முதல் செயற்பாட்டில் (இ-புராக்யூர்மென்ட் சிஸ்டம்) மின்னணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக முந்தைய கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. .

இதனால், இந்த முறைமையை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த உபகுழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், பல அமைச்சரவை அமைச்சகங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு சோதனை அடிப்படையில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எளிதான மற்றும் விரைவான சேவையை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. .

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) அதிகாரிகள் இதற்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: