வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்த முயற்சி!

Tuesday, October 24th, 2017

ஒஸ்ரிய நிவாரண கடனுதவியின் கீழ் 33 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாசவும் ஒஸ்ரிய நாட்டின் ஒடெல்கா வைத்திய நிறுவனத்தின் முகாமையாளரும் பணிப்பாளருமான பீற்றர் ஹாங் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கிடைத்துள்ளது

ஒஸ்ரியா நிறுவனத்தன் மூலம் 95 இலட்சம் யூரோவுக்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்து வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தப்பட உள்ளன. இலவச சுகாதார சேவை என்பது பெயர் பலகைகளுடன் வரையறுக்கப்படாமல் அரசாங்கம் இதற்காக பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்

Related posts: