வேலை செய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவது அனைவருக்கும் நன்மைதரும் : பிரதமர் ‘

Saturday, April 30th, 2016

தொழிலாளர் வர்க்கத்தினருக்காகக் குரல்கொடுக்கும் தொழிற்சங்கங்கள், தமது அரசியல் தேவைகளை விட, வேலை செய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுவது, தொழிலாளர் வர்க்கத்தினதும் நாட்டினதும் நலனுக்குக் காரணமாய் அமையும். அதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பது அரசினது அபிலாஷையாகக் காணப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, மே தினம், சமூக மேம்பாட்டுக்காக வியர்வை சிந்தி, ஊழியத்தை அர்ப்பணித்து, தமது பங்களிப்பினை வழங்குகின்ற வேலை செய்யும் மக்களின் தினமாகும். தொழிலாளர் வர்க்கத்தினர், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆற்றும் பணிக்கு நன்றியைத் தெரிவிக்கின்ற, அவர்களது ஊழியப் பங்களிப்பினை மதிப்பீட்டுக்கு உட்படுத்துகின்ற, அதற்கு உரிய பெறுமானத்தை வழங்குகின்ற, அவர்களது நலனுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற, அதற்கான ஒழுங்குமுறையான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின்ற ஒரு நாளாக மே தினத்தை மாற்றிக் கொள்வது, நம் அனைவரினதும் பொறுப்பாகும்.  தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றிகொள்ள, இந்த மே தினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதோடு, அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts:


மின்சார சபைக்கு 50 பில்லியன் ரூபாய் நிலுவையை செலுத்தியது எரிசக்தி அமைச்சு - அமைச்சர் மஹிந்த அமரவீர த...
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொது சுகாதார ஆய்வாளர்க...
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் - இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி - சுயாதீனமாக ச...