வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை!
Tuesday, July 4th, 2017
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்ட தீர்மானத்தை ஒத்திவைக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கைவிடுத்துள்ளார்.
சைட்டம் எனப்படும் மாலபேதனியார் மருத்துவக் கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரிஅரசமருத்துவஅதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டுடன் பலதொழிற் சங்கங்களைஒன்றிணைத்துபாரியவேலைநிறுத்தப்போராட்டத்தைமுன்னெடுப்பதாகதீர்மானிக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் நேற்றையதினம் கூடியஅரசமருத்துவஅதிகாரிகள் சங்கத்தின் மத்தியசெயற்குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறாகஅரசமருத்துவஅதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகமருத்துவமனைகளுக்குபல்வேறுநோய்களுக்குசிகிச்கைகாகசெல்லும் நோயாளர்கள் பல்வேறுசிரமங்களைஎதிர்நோக்கிவருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்குபாதிப்புகளைஏற்படுத்தும் வகையிலும்,சிரமங்களைஏற்படுத்தும் வகையிலும் குறித்தபோராட்டம் அமைந்துவிடும் பட்சத்தில் அரசமருத்துவஅதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தைகைவிடவேண்டுமென்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைதெரிவித்துள்ளார்.
இதனிடையேஉயிர்க்கொல்லிநோயானடெங்குஒழிப்புத் திட்டத்திற்குஅரசமருத்துவஅதிகாரிகள் சங்கத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்றும் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒருவாரத்திற்க ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|
|


