வேலணை மத்திய கல்லூரி மாணவன் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

Thursday, June 14th, 2018

வேலணை மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பம் இன்று இரவு வேலணை மத்தியகல்லூரியின் மாணவர் விடுதி மலசல கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

வேலணை மத்திய கல்லூரியில்  தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன்(வயது 14) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது –

நேற்றையதினம் குறித்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை குறித்த மாணவனின் தாயார் ஏற்கனவே இவ்வாறான ஒரு சம்பவத்தில் இறந்துள்ளதாகவும்  தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச தவிசாளரும்  கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி மற்றும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களான ஹேமதாஸ் மற்றும் அனுஷியா ஆகியோர் நேரில் சென்று சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

35301204_1799967076709038_4269581380695883776_n

Related posts: