வேலணை பிரதேச அபிவிருத்திக்காக 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!
Thursday, November 29th, 2018
வேலணை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் சபையினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரு மூர்த்தி தலைமையில் நேற்றையதினம் (28) நடைபெற்றது.
இதன்போது அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நிறுத்தி சபையின் உறுப்பினர்களால் பல முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இவை தொடர்பில் குறித்த சபை அமர்வில் விவாதிக்கப்பட்டு வேலணை பிரதேச சபையால் அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி பணிப்பாக 50 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தேரிவித்தார்.


Related posts:
அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் - பொது மக்களிடம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி கோரிக்கை!
பாபர் மசூதி விவகாரம் - லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தனியார் துறையினருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு – நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிப...
|
|
|


