தனியார் துறையினருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு – நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, January 5th, 2022

வாழ்க்கைச் செலவு பிரச்சினை அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார் துறையினரையும் பாதிக்கும் என்ற காரணத்தினால் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தொழில் தருனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தென்னிலங்கை ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 7, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

ஆடைத் தொழிற்சாலைகள், பெருந்தோட்டத்துறை, சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மையாளர்கள், கடைகள் காரியாலய சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் துறையைச் சேர்ந்த தொழில் தருனர்களுடனும் இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: