பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022

பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது பாகிஸ்தானிய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்டதாக பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரச வர்த்தக் கூட்டுத்தாபம், விரைவில் வர்த்தக அமைச்சுக்கு உடன்படிக்கை வரைபு ஒன்றை சமர்ப்பிக்கும். இந்த வருடத்துக்குள் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சிமெந்து, பாஸ்மதி அரிசி என்பன இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, தற்போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பெறுமதியை 500 மில்லியன் டொலர்களில் இருந்து 2 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: