வேலணை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களின் நலன்கள் உறுதிசெய்யப்பட வேண்டும் – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Sunday, June 17th, 2018

வேலணை பிரதேசத்தில் வாழும் கலைஞர்களின் ஆற்றல்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுகொடுத்து எமது தேச கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு நாம் என்றும் துணை நிற்போம் என  வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணையூர் நடாசிவராசாவின் “சின்னச்சின்ன தூறல்கள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் –

எமது இனத்தின் வரலாற்று பொக்கிசங்கள் மற்றும் கலை இலக்கியங்களை வளர்ப்பதில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது பல்வேறுவகையான நலத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன்  அவற்றை பெற்றுக்கொடுத்தது கலைஞர்களுக்கு கௌரவங்களையும் வழங்கியிருந்தார்.

ஆனாலும் எமது மக்களிடையே கலைப் படைப்புக்களை வளர்ப்பது தொடர்பில் ஆர்வம் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் நடந்தமுடிந்த யுத்தமாக இருந்தாலும் எமது இளைஞர்கள் அந்த துறையில் அதிகளவு கவனம் செலுத்தவதில்லை என்றே கருத முடிகின்றது.

ஆனால் நாம் எமது இனத்தின் கலை கலாசார படைப்புக்களை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கு கடமைப்பட்டுள்ளோம். அந்தவகையில் கலைப்படைப்பாற்றல் மிக்க அனைவரும் ஒன்றுபட்டு அதற்காக உழைக்கவேண்டும். இதனூடாகவே எமது இனத்தின் மொழியை கலை காலாசார விழுமியங்களை மேலும் வளர்த்துச் செல்லமுடியும் என்றார்.

Related posts: