வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை – வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் மற்றும் சீனா என்றழைக்கப்படும் பெண் சிங்கம் ஆகியன தற்போது குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிங்கத்திற்கு மேற்கொண்ட எக்ஸ்-கதிர் பரிசோதனையின்போது அதன் நெஞ்சு பகுதியில் சளி காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாளாந்தம் மிருகங்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் இதற்கான உரிய நடவடிக்கைகளை மிருககாட்சிசாலை திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் முல்லைத்தீவில் இருவர் பலி!
வாகனச் சாரதியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய விவகாரம் – ஏற்கமுடியாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்...
எரிபொருள் விலை அடுத்த இரு வாரங்களில் மேலும் குறையும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!
|
|