வேகமான வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் உயர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி – மத்திய வங்கி தகவல்!

Monday, June 5th, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(05.06.2023)  மீண்டும் அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை(02.06.2023) அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி  சடுதியாக வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மீ்ண்டும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை   298.85 ரூபாவாகவும், கொள்வனவு விலை   285.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி   321.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  304.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 372.53 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   353.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்கும் மாணவர்கள் - பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வ...
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனட...
கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் - சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஜ...