வெள்ளை சீனியின் விலையை உயர்த்த முடியாது..
Monday, June 12th, 2017
நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி வெள்ளைச் சீனியின் விலையை தன்னிச்சையாக வர்த்தகர்கள் உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார சட்டத்தின் அடிப்படையில் வெள்ளைச் சீனி ஓர் நிலையான பண்டமாக பட்டியலிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சீனியின் விலையை உயர்த்த வேண்டுமாயின் அதிகார சபையின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. குறித்த இந்த விடயம் அத்தியாவசிய பண்ட இறக்குமதியாளர் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், வெள்ளைச் சீனிக்கான இறக்குமதி வரி 1Kg 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தது.
குறித்த இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து பால் மற்றும் வெறும் தேநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாவனையாளர் முறைப்பாட்டு எண் அறிவிப்பு!
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் - மத்திய வங்கி அத...
சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட16 பேர் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம் - பருத்தித்துறை ...
|
|
|


