வடமாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின்  தேவைகள் கேள்விக்குறியாக மாறிவருகின்றது!

Friday, December 2nd, 2016

வடமாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின்  தேவைகள் கேள்விக்குறியாக மாறிவருகின்றது.  எங்களுடைய சமூகம் மாற்றுத்திறனாளிகளின் மதிப்பைக் கட்டியெழுப்ப முடியாத சமூகமாகத் தற்போது மாறிவருகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தெரிவித்தார் வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி-பி. செல்வி இறேனியஸ்.

யாழ்ப்பாணம் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழா கடந்த புதன்கிழமை(30) முற்பகல்-09.30 மணி முதல் நல்லூர் நாவலர் வீதியிலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தசூழலுக்குப்  பின்னர் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலை நீடிக்கிறது. குறிப்பாக வடமாகாணத்தில் விசேட கல்விப்பிரிவுகளில் கல்வி கற்றுவருகின்ற சிறுவயது முதல்16 வயது வரையுள்ள விசேட தேவையுடைய மாணவர்களின் தேவைகள் கேள்விக்குறியாக மாறிவருகின்றது.  வடமாகாணத்தினைப் பொறுத்தரை முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

220 இற்கும் மேற்பட்ட சிறார்கள் தற்போது வடமாகாண விசேட கல்விப்பிரிவில் கல்வி கற்றுவருகின்றனர். இவ்வாறு கற்று வரும் சிறார்கள் திறமைமிக்க சாதனையாளர்களாக உருவாக வேண்டுமாயின் அவர்களுக்கான ஒருங்கிணைப்பை மத்திய அரசாங்க அதிகாரிகள் வழங்க முன்வர வேண்டும் என்றார்.

unnamed (1)

Related posts: