வெளியுறவு அமைச்சர் பிரித்தானியாவிற்கு விஜயம்!
Monday, January 9th, 2017
வெளிவிவகார அமைச்சர் இன்றுமுதல் 14 ஆம் திகதி வரை பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரித்தானியாவிற்கு பயணமாகின்றார்..என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
தெரேஸாமேரி பிரித்தானியா பிரதமராக தெரிவு செய்யப்பட்டப் பிறகு இலங்கை அரசாங்க பிரதிநிதியை முதல் முறையாக சந்திக்கவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர், பிரித்தானிய பொதுநலவாய நாடுகளுக்களின் செயலாளர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல்வேறு பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள், அவற்றின் அடைவு விகிதங்கள் குறித்து விளக்கப்படுத்தவுள்ளார். என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சோள உற்பத்தி அதிகரிப்பு!
இலங்கை பெற்ற கடனை திரும்பச் செலுத்த மேலும் ஒரு வருடத்தை நீடித்தது பங்களாதேஷ்!
யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - பொலிஸார் தீவிர விசாரணை!
|
|
|


