இலங்கை பெற்ற கடனை திரும்பச் செலுத்த மேலும் ஒரு வருடத்தை நீடித்தது பங்களாதேஷ்!

Monday, May 9th, 2022

பங்களாதேஷ் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது.

இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மூன்று மாதங்களுக்குள் செலுத்தும் வகையில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டது.

அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய பங்களாதேஷ் மேலும் ஒரு ஆண்டுக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக இலங்கைக்கு தேவையான உணவு, எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை பங்களாதேஷிடம் 200 மில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ...
கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கப்படும் - இலங்கைக்கான பிரித்தானிய உயர...
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் -...