வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!
Saturday, December 28th, 2019
2019ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.
அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமராட்சியில் பெண் படுகொலை - திட்டமிட்ட செயலா என பொலிஸார் விசாரணை!
எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்ப...
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவி...
|
|
|


