வெளிமாவட்ட தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளின் பணிப் புறக்கணிப்பு: பயணிகள் அவதி!

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள வெளிமாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் இன்றையதினம்(30) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்டுவரும் சேவை நேர அட்டவணை முரண்பாடுகள் காரணமாகவே இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடைபெற்றுள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு உடடினயாக தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் பிரச்சினை தீர்க்கப்படம்வரை தாம் தொடர்ந்து பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாகவும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் ஒத்திவைப்புக்கு நாம் பொறுப்பல்ல! - மஹிந்த தேசப்பிரிய
பிரதேச செயலகப்பிரிவில் தொழில் தேடுவோர் விபரங்கள் சேகரிப்பு!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|