வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளனர் – தகவல்களை தெரிந்திருப்பின் அறிவிக்குமாறு சிறைச்சாலை தலைமையகம் கோரிக்கை!
Tuesday, May 10th, 2022
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அதன்போது, குறித்த கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனையடுத்து, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த கைதிகள் தொடர்பான தகவல்களை தெரிந்திருப்பின், சிறைச்சாலை தலைமையகத்துக்கோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் சிறைச்சாலை தலைமையகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
G.C.E.O/L: விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு!
பெடீ வீரகோன் காலமானார்!
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை பிரேரணை மீதான விவாதம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு!
|
|
|


