வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி – நபர்களிடம் அகப்பட வேண்டாம் என பொதுமக்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் வலியுறுத்து!

Sunday, September 18th, 2022

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார வேண்டுகெள் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல பெருமளவானோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு கடவுச்சீட்டு அல்லது பணத்தை வழங்க முன்னர், அதனை பெற்றுக்கொள்ளும் நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என அதன் அனுமதிபத்திரத்தை சரிபார்த்து செயற்படுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: