வெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்!
Saturday, December 22nd, 2018
இலங்கையின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு 14 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மத்திய மாகாணத்தில் 349 பிள்ளைகளுக்காக 87 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 250 பிள்ளைகளுக்கும் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வருடாந்தம் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் விசாரணை செய்ய விசேடகுழு!
மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறு...
|
|
|


