வெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்!

இலங்கையின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு 14 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மத்திய மாகாணத்தில் 349 பிள்ளைகளுக்காக 87 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 250 பிள்ளைகளுக்கும் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வருடாந்தம் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியாருக்காகவே மின்வெட்டு – குற்றஞ் சுமத்துகிறார் இலங்கை மின்சார தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர்!
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் - சுகாதார அமைச்சர...
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் - இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!
|
|