வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு குறைந்த சம்பளமாக 300 டொலர்கள் – அமைச்சரவைக்கு யோசனை!

Saturday, March 4th, 2017

 

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு இந்த வருடம் தொடக்கம் அமெரிக்க டொலரில் 350, ஆகக் குறைந்த சம்பளமாக வரையறுக்கப்பட்டு, வரவு செலவுத்திட்டத்தில் நிதியமைச்சர் முன்வைத்த யோசனையினை இரத்து செய்து முன்னர் இருந்தது போலவே அமெரிக்க டொலரில் 300 டொலர்களை கோரி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள அமைச்சரவைக்கு யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு மற்றும் காப்புறுதி கட்டணங்கள் தொடர்பில் நிதியமைச்சு முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனையால் இலங்கைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இழக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சரது அமைச்சரவை பத்திரத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய வெளிநாட்டிற்கு பயிற்சி பெற்று செல்லும் பயிற்சியாளர்களுக்கு சம்பளமாக அமெரிக்க டொலரில் குறைந்தது 450 ஆகவும்,பயிற்சியின்றி செல்வோருக்கு சம்பளமாக அமெரிக்க டொலரில் 350 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

குறித்த திருத்தப்பட்ட சம்பள முறைமையின் உயர்வானது 2017 பெப்ரவாரி மாதம் 01ம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக இலங்கையர்களுக்கு 2016 வரவு செலவுத் திட்டத்தின் படி அமெரிக்க டொலரில் 300 ஆக ஆகக் குறைந்த சம்பளம் வரையறுக்கப்பட்டிருந்தும் அது கடந்த வருடம் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

83174_thalatha-ahtukorala-01-415x260

Related posts: